கருப்புப் பணத்தை ஆன்லைனில் வெள்ளையாக்க வாய்ப்பு !!

புதிதாய் இயற்றப்பட்டுள்ள கருப்புப் பண சட்டத்தின் படி இந்த செப்டம்பர் 30க்குள் இதுவரை கணக்கில் வராத பணத்தையும், சொத்துக்களையும் உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு தண்டனை எதுவும் தரப்படாது. தொடர்ந்து அந்த சொத்துக்கள் மேல் உங்களுக்கு வரிகள் விதிக்கப்படலாம். செப்டம்பர் 30க்கு அப்புறம் கண்டுபிடிக்கப்பட்டால் உங்களுக்கு சிறை தண்டனை உறுதி.

கணக்கில் வராத சொத்துக்கள் மற்றும் பணத்தை அறிவிக்க வருமானவரித்துறை ‘படிவம்-6′ ஐ ஆன்லைனிலேயே நிரப்பி சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கான இணைப்பு வருமானவரித் துறையின் இணையதளம் https://incometaxindiaefiling.gov.in ல் கிடைக்கிறது. இதில் சொத்துக்களை அறிவித்துவிட்டு அதை டிஜிட்டல் கையெழுத்து இட்டு அனுப்பவேண்டும். டிஜிட்டல் கையெழுத்து மூலம் போலியான ஏமாற்று விண்ணப்பங்கள் தடுக்கப்படும்.

செப்டம்பர் 30க்குள் அறிவிக்கப்படும் பணம்-சொத்துக்களுக்கு 30 சதவீதம் வரி போடப்படும் மற்றும் ஒரு அபராதத் தொகையும் போடப்படும். அதை டிசம்பர் மாதத்திற்குள் கட்டிவிடவேண்டும். செப்டம்பர் 30க்குப் பின் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டாத பணம்-சொத்துக்களுக்கு 120 சதவீதம் வரியும் 10 வருடங்கள் வரை தண்டனையும் தரப்படும்.

அதனாலே சிட்டிசன்கள் செப்டம்பர் 30க்குள் சொத்துக்களை ஒழுங்கா கணக்குல காட்டிடுங்க சரியா ? லலித் மோடி 18 ஆயிரம் கோடி, வியாபம், ஸ்பெக்டரம், கோல்கேட் …. இப்படி இத்தனை ஆயிரம் கோடிகள் கொள்ளையடிச்சாங்கன்னு பேப்பர்ல விலாவரியா வருதே இவுக எல்லாம் எப்படி “கணக்கு’ காட்டினாங்கன்னு நீங்க யோசிச்சா தப்பு. டாடா, அம்பானி, அதானிலருந்து நம்ப நித்யானந்தா வரை எப்படி பல்லாயிரம் கோடிகளை லீகலாவே வெச்சிருக்காங்கன்னும் நீங்க யோசிக்கப்படாது.