பிளாஸ்டிக் அரிசி – கலப்படத்தில் புதுமை !!

வாட்டர் மெலானுக்குள்ளயும் சிகப்பு கலர் டையை இன்ஜெக்ட் பண்ணி கலப்பட சாதனை சயின்ட்டிஸ்ட்டுகளாக இருக்கும் நம்ம ஆட்களுக்கு சவாலாக வந்திருக்குது புதிய கலப்பட டெக்னிக். அது தான் பிளாஸ்டிக் அரிசி.

டெல்லி ஹைகோர்ட்டில் சுக்ரீவா துபே என்கிற வழக்கறிஞரால் போடப்பட்டிருக்கும் பொதுநல வழக்கு ஒன்றில் தான் இது பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகமயமாக்கலினால் அரிசி, பருப்பு போன்ற உணவு தானியங்கள் போதுமான அளவு இந்தியாவில் விளைந்தாலும் அதில் நல்லதை வேறு நாட்டுக்கு விற்றுவிட்டு ‘சீப்’பாக சீனாவிலிருந்து இறக்குமதியும் செய்யப்படுகின்றன.

அவ்வாறு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் பிளாஸ்டிக்கினாலான அரிசியும் கலப்படம் செய்யப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் அரிசியை நிஜ அரிசியிலிருந்து பிரித்தரிய முடியாது. அதை நிஜ அரிசியோடு சமைத்து உண்பதால் குடல் சம்பந்தமான கொடிய நோய்கள் வரும். பிளாஸ்டிக்கை சூடுபடுத்தி உண்பது போன்றது அது. எனவே மொத்த வியாபாரத்தில் பிளாஸ்டிக் அரிசி கலப்படங்களை கண்டுபிடித்து தடை செய்ய நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.