காண்டம்களால் வரையப்பட்ட போப் படம் !!

அமெரிக்காவிலுள்ள மிலுவாக்கியில் உள்ள கலைப் பொருள் மியூசியத்தில் போப் பெனடிக்ட்  XVI ன் உருவப்படம் ஒன்று அண்மையில் வைக்கப்பட்டது. அதை எதிர்த்தும் ஆதரித்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. என்ன காரணம் ?

அந்த உருவப்படம் முழுக்க முழுக்க காண்டம்களால் செய்யப்பட்டதாம். நிக்கி ஜான்சன் என்கிற மிலுவாக்கியைச் சேர்ந்த ஓவியர் இரண்டு வருடங்களுக்கு முன் 17000 காண்டம்களை வைத்து வரைந்த (செய்த) படம் இது. ‘பெனடிக்ட் முட்டைகள்’  என்று பெயரும் வைத்திருந்தார் இந்தப்
படத்திற்கு. போப் காண்டம்கள் உபயோகிக்கக் கூடாது என்கிற ரீதியில் பேசியிருந்தார்.  ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ்க்கு எதிரான விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காகக் கூட அந்தக் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை அவர். அதை குறிக்கும் விதமாகவே இந்தப் படத்தை நிக்கி வரைந்தாராம்.

பின்பு பெனடிக்ட் கொஞ்சம் தனது நிலையை மாற்றிக் கொண்டு சில நேரங்களில் காண்டம்கள் இது போன்ற கொடிய நோய்களிலிருந்து தப்பிக்க உதவுகிறது என்று குறிப்பிட்டார். பின்பு 2013ல் போப் பதவியிலிருந்து தானாகவே விலகிக் கொண்டார் பெனடிக்ட்.

இந்த உருவப் படத்தை காட்சிக்கு வைத்திருப்பதை எதிர்த்து போனில் எதிர்ப்புக் குரல்கள் வந்தாலும் அதை விடப் பலமடங்கு ஆதரவுக் குரல்களும் வந்திருப்பதால் இந்தப் படத்தை காட்சியிலிருந்து நீக்கும் முடிவு இல்லை என்கிறது மியூசிய நிர்வாகம்.