தனுஷ் புதுப்பேட்டை, அனேகன், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் சாதாரண பக்கத்து வீட்டு இளைஞன் போல வந்து அசரடித்தார். அதே போல இந்தப் படத்திலும் வேண்டும் அதே நேரம் பழைய படங்களின் சாயல் இல்லாமல் தோன்றவேண்டும் என்று முயற்சித்தேன். அது தான் மாரி என்கிறார் மாரி படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன். படம் பற்றி மேலும் அவருடன் உரையாடியபோது..

‘மாரி’ கதை எப்படி ?
தனுஷ் வடசென்னையைச் சேர்ந்த ஒரு பையன். பந்தயத்துக்கு புறா விட்டு ( ஆடுகளத்தில் கோழிச்சண்டை. இதில் புறாப்பந்தயமா சார்?) நண்பர்களுடன் கலாட்டா செய்து ஜாலியாக வாழும் இளைஞன். திடீரென்று நிகழும் ஒரு நிகழ்வால், ஒரு கணத்தில் அவனது வாழ்க்கை மாறுகிறது.
எங்கே? எப்படி ? என்பது தான் படத்தின் உள்ளடக்கம்.

தனுஷ் எப்படி மாரியாக வந்தார் ?
இரண்டு படங்கள் இயக்கிய பின் அடுத்த படம் தனுஷ் சாரை வைத்து தான் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரு நாள் அவரை சந்தித்து கதையைச் சொன்னேன். கதை கேட்டுவிட்டு முழு திரைக்கதையைக் கொடுங்கள் என்றார். நான் அந்தக் கதையை மூன்று வகையான திரைக்கதைகளாக எழுதி அவரிடம் கொடுத்தேன். படித்துவிட்டு அதில் ஒன்றை தேர்வு செய்தார். அது தான் நான் மனதில் தேர்வு செய்து வைத்திருந்ததும். பின்பு படத்தை தயாரிக்க ராதிகா சரத்குமாரை அனுகிய போது “இந்தக் கதைக்கு தனுஷ் பொருந்தி வருவார். அவரிடம் நடிக்க
பேசிப்பாருங்கள்” என்று அவரும் தனுஷ்ஷையே தேர்வு செய்தார். இப்படியாக தனுஷ் மாரியாக மாறிவிட்டார்.

சென்னையை மையமாகக் கொண்ட கதையென்றால் பெரும்பாலும் அரசியல், காதல், நட்பு என்று வழக்கமான விஷயங்கள் தானே வரும் ?
இது மாதிரி இருக்கு. அது மாதிரி இருக்கு என்று யாரும் சொல்லிவிடக்கூடாதே என்று காட்சியமைப்பில் சிரத்தை எடுத்துக் கொண்டோம். மாஸ் ஹீரோ சாயலே இல்லாமல் சைதாப்பேட்டையில் சிக்னலுக்கு நிற்கும் சாதாரண இளைஞனாக வந்து அசத்தியிருக்கிறார் தனுஷ். மீசையை நன்கு வளர்க்க வைத்து உடம்பை உடற்பயிற்சி செய்து இறுக்கி ஆளே பார்க்க மாறிவிட்டிருக்கிறார் தனுஷ்.

காஜல் அகர்வால் முதன் முதலில் தனுஷ்ஷூடனஅ இணைந்து நடித்திருக்கிறாரே !!
காஜல் அகர்வால் மும்பைக்காரப் பெண். அவர் இந்த லோக்கல் கதைக்கு பொருந்தி வருவாரா என்கிற யோசனையோடே முதலில் இருந்தேன். பின்பு போட்டோ ஷூட் செய்து பார்த்தபோது அவர் பல மடங்கு பொருத்தமானவராகத் தெரிந்தார். இவருக்கும் நீளமான டயலாக்குகள் பேசவேண்டிய
தேவை வந்தது. சிரத்தையெடுத்து தனுஷ்ஷிடம் உச்சரிப்பு கற்றுக் கொண்டு பேசி நடித்துக் கொடுத்தார். முதலில் புறாக்கள் என்றாலே கொஞ்சம் பயந்து தள்ளி நின்ற காஜல் அகர்வால் போகப் போக புறாக்களை கையில் எடுத்து கொஞ்சும் அளவுக்கு அன்பாகிவிட்டார். இந்த ஜோடி பேசப்படும்
ஜோடியாக வரும். படத்தின் அனிருத்தின் இசை அமர்க்களமாக வந்திருக்கிறது.. நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு வலுப்பட்டிருக்கிறது.

Related Images: