மிலா குயுனிஸ் , ஆஷ்டன் கட்சர் – திருமணம்.

ஹாலிவுட் நடிகர் ஸ்டீவ் ஜாப்ஸாக ‘ஜாப்ஸ்’ படத்தில் நடித்த ஆஷ்டன் தன்னுடன் ஆரம்பகாலத்தில் இணைந்து நடித்த நடிகை மிலா குயூனிஸ்ஸை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது

37 வயதான ஆஷ்டன் கட்சர் கடந்த 2005ல் ஹாலிவுட் நடிகை டெமி மூருடன் செய்து கொண்ட திருமணம் 2013ல் விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்பு அவர் மிலா குயூனிஸ்ஸூடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். 1998ல் இவர் கியூனிஸ்ஸூடன் ‘தேட் செவன்ட்டீஸ் ஷோ’ (That 70s show) என்கிற டி.வி. சீரியலில் இணைந்து நடித்தார். அப்போது அவர்களிடையே தோன்றாத காதல் கடந்த 2014ல் தோன்றியிருக்கிறது.

பிப்ரவரி 2014ல் அவர்கள் இருவரும் நிச்சயம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அக்டோபர் 2014ல் வ்யாட் இசபெல் என்கிற பெண் குழந்தை பிறந்தது.  தங்கள் திருமணத்தைப் பற்றி இருவருமே அறிவிக்காத நிலையில் திடீரென்று இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை இருவர் தரப்பிலிருந்தும் இதற்கு மறுப்பேதும் வரவில்லை.

அதான் புள்ளையே பெத்தாச்சே. அப்புறமென்ன இன்னும் யோசனை வேண்டிக் கெடக்கு?