நாம் உபயோகிக்கும் ஏர்கண்டிஷனர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி குளிர்ச்சி தருவதில்லை. வீட்டில் அல்லது அலுவலகத்தில் நாம் உபயோகப்படுத்தும் ஏர்கண்டிஷனர்கள் ஒவ்வொரு வயதினருக்கும், ஆண் மற்றும் பெண்ணுக்கும் வெவ்வேறு அளவில் குளிர்ச்சி தருகின்றன.
ஏர்கண்டிஷனர்கள் குளிரூட்டும் வெப்பநிலையானது பெண்களுக்கு அதிகப்படியான தாங்கமுடியாத குளிரைத் தருகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நமது உடலின் வளர்சிதை மாற்ற ஆற்றல் (Metabolic Rate) என்பது ஒரு நாளைக்கு நாம் உயிரோடு இயங்கி வேலைகள் செய்ய நம் உடலுக்கு தேவையான ஆற்றல் அளவாகும். இதில் ஓய்வு-வளர்சிதைமாற்ற-ஆற்றல்(Resting Metabolic Rate-RMR) என்பது ஒரு மனிதன் எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே ஓய்வெடுக்கும் போது உடல் செலவிடும் ஆற்றல் ஆகும்.

இந்த ஆர்.எம்.ஆர் அளவைக் கொண்டே ஏர்கண்டிஷனர்களின இயங்கும் வெப்பநிலை(Operating temperature) நிர்ணயிக்கப்பட்டது. பெண்களின் வளர்சிதை மாற்ற ஆற்றலோ ஆண்களை விட 35 சதவீதம் குறைவானது. 1960களில் ஆண்களை மட்டுமே கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த மாதிரி வெப்ப அளவையே எல்லா ஏர்கண்டிஷனர்களும் இன்னும் உபயோகப்படுத்துகின்றன. எனவே இது பெண்கள், குழந்தைகள், ஒல்லியானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு அவர்கள் தாங்க முடிவதை விட அதிக குளிர்ச்சி தருகிறது.

எனவே இனிமேல் புதிதாய் வரும் ஏர்கண்டிஷனர்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் மற்றும் இளம்பெண்கள் என்று செட்டிங்குகள் வரலாம்.

Related Images: