மிழ்சினிமாவில் இன்றைய இளம் நடிகர்கள் என்று பார்த்தால் அனைவருமே வாரிசு நடிகர்கள்தான். பார்க்க நன்றாக இருக்கிறார்களோ இல்லையோ நடிப்பு வருகிறதோ இல்லையோ அவர்களை சகித்துக்கொண்டே ஆகவேண்டிய நிலை ரசிகர்களுக்கு.

மேற்படி நடிகர்களில் கடலில் இறங்கி முத்துக்குளித்து தனது பயணத்தைத் தொடங்கிய அலைகள் அப்பாவின் பிள்ளை  ஆடும் ஆட்டம் தாங்கமுடியவில்லையாம். அறிமுகமான படம் முதல் எந்தப்படமும் ஓடவில்லை.  கேட்கும் சம்பளமும் போடும் ஆட்டமும் தாங்கமுடியாமல் அவர் நடித்து வந்த இரு படங்களும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.

இதனால் சில மாதங்களாக ஷூட்டிங் போகமுடியாத சோகத்தில் ஃபுல் மப்பில் தனக்கு ப்ரியமான  நடிகையின் வீட்டில் ஆனந்தமாக செட்டில் ஆகிவிட்டாராம்.

நிலைமை இப்படியே நீடித்தால் தமிழ்சினிமா உங்களுக்கு பை ராஜா பை சொல்லிவிடும் ஜாக்கிரதை.

Related Images: