ஈபே நிறுவனம் உலகம் முழுதும் ஆன்லைனில் பொருட்களை விற்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. அதன் சாப்ட்வேர் பிரிவு இந்தியாவிலேயே பிரத்யேகமாக இயங்குகிறது. ஆன்லைனில் அதன் தளத்திற்குச் சென்று பொருட்களை ஆர்டர் செய்து ஆன்லைனில் பணம் செலுத்திவிட்டால் போதும், வீடு தேடிப் பொருள் வந்துவிடும்.

இந்த ஈபேயின் ஆன்லைன் தளத்தில் கல்கத்தாவைச் சேர்ந்த சுபாஷிஸ் தாஸ் என்பவர் கடந்த 1ஆம் தேதி 43ஆயிரம் ரூபாய்க்கு ஒரு புதிய ஐபோன் 6 ஐ ஆர்டர் செய்திருக்கிறார். ஈபே இந்தியாவின் 2014 மெகாடீல் என்கிற திட்டத்தில் அவர் இந்த போனை ஆர்டர் செய்திருக்கிறார். வழக்கமாக இரண்டு நாட்களில் வீட்டிற்கு வந்து சேரவேண்டிய பார்சல் அவருக்கு ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் 8ம் தேதி வந்திருக்கிறது.

அந்த ஈபே பார்சலை பிரித்தவருக்கு அதிர்ச்சி. அதில் ஐபோன் 6க்குப் பதிலாக இரண்டு டைட் பார் சோப்புக்களே வந்திருக்கின்றன. உடனே அவர் ஈபேயின் கஸ்டமர் சர்வீசுக்குத் தொடர்பு கொண்டு கம்ப்ளெய்ன்ட் செய்திருக்கிறார் (கம்ப்ளெய்ன்ட் நம்பர் – 1150629). ஆனாலும் அதன் பின்னும் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவருக்கு “ஸாரி உங்கள் கம்ப்ளெய்ன்ட்டை நாங்கள் எடுத்துக் கொள்ள இன்னும் விவரங்கள் தேவை என்று புகைப்படங்கள் தேவை” என்று கேட்டு அவருக்கு ஈபேயிலிருந்து மெயில் வந்திருக்கிறது. புகைப்படங்களை அப்லோட் செய்வதற்காக அவர்கள் கொடுத்த இணைப்புக்குச் சென்றிருக்கிறார். அந்த இணைப்பு இயங்கவேயில்லை. இத்தகவலை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஈபேயில் இது மாதிரி ப்ராடுத்தனங்கள் நடக்காது என்று பலரும் நம்பி வந்தனர். அவற்றை பலர் கூறக் கேட்டும் இருக்கிறோம். ஆனால் இப்போது அது உண்மைதான் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.

Related Images: