பெண் சாமியார் ‘ராதே மா’ வின் கவர்ச்சி டான்ஸ்!!

ஆன்மீகம் நிறைந்த நம் இந்தியாவில் டுபாக்கூர் ஆன்மீகவாதிகளுக்கும் பஞ்சமில்லை. நம் ஊர் பிரேமானந்தா, நித்யானந்தா, காஞ்சி காமகோடி என்கிற வரிசையில் அம்பலமாகியிருப்பவர் இந்த பெண் சாமியார் ராதே மா.

உயர்தட்டு மக்களுக்கான சாமியாரியான இவர் மீது சமீபத்தில் ஒரு பக்தை புகாரளித்தார். அதன்படி அந்த பக்தையின் திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டாருக்கு 102 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொடுத்தாகவும், ஆனால் ராதே மா அந்தப் பெண்ணின் கணவர் வீட்டாரிடம் மேலும் வரதட்சிணை கேட்கும்படி வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். அதையொட்டி நாசிக்கில் நடைபெறும் கும்பமேளா விழாவிற்கு அவர் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பி.டி.ஐ செய்தி குறிப்பிடுகிறது.

இதே போல இவர் நடத்தும் சத்சங்கத்தில் தனது சீடர்களுடன் சேர்ந்து ஆபாசமாக உடலசைவுகளுடன் நடனமாடியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இந்த யம்மா.. ஸாரி இந்த மா சிறிய கவர்ச்சியான ஸ்கர்ட் அணிந்து போஸ் கொடுத்திருக்கும் படம் வெளியாகி மேலும் பரபரப்பூட்டியது.

இந்தப் படங்களை ட்விட்டரில் வெளியிட்டவர் ராகுல் மஹாஜன். பி.ஜே.பியின் தலைவர்களில் ஒருவரான பிரமோத் மஹாஜனின் மகன். இந்த ராதே மா பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் தீவிர ரசிகையாம்.