கார்த்திக்கின் இயக்கத்தில் ‘உள்குத்து’

கடந்த வருடம் வெளி ஆகி வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்று , விமர்சகர்களாலும் பாராட்டுப் பெற்று எல்லோருடைய உள்ளத்தையும் களவாடிய ‘ திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த Kenanya பட நிறுவனமும், இயக்குனர் கார்த்திக்கும் இணைந்து மீண்டும் ‘உள்குத்து’ என்ற படம் மூலம் இணைந்து பணி புரிய உள்ளனர். முதல் முறையாக நந்திதா இணைந்து நடிக்கும் ‘உள்குத்து’, Action , thriller ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.

மீன் வெட்டி பிழைப்பவர்களை அடிப்படையாக கொண்டு உருவாக்க படும் ‘உள்குத்து’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் நாகர்கோவிலில் 45 நாட்கள் இடை விடாத படப்பிடிப்பு மூலம் படமாக்க பட உள்ளது

.இந்த படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் கூறுகையில் ‘ மீன் வெட்டுபவர்களின் வாழ்வியல் மிகவும் வித்தியாசமான ஒன்று. அவர்களை பற்றிய படம் என்றதும் எங்கள் அனைவரின் ஒரு மித்த கருத்தும் கதை களம் நாகர் கோவிலாகத்தான் இருக்க வேண்டும் என்பது தான். அந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும்.

தினேஷ் .- நந்திதா இணைய அவர்களுடன் பால சரவணன், ஜான் விஜய்,ஸ்ரீமன் , சரத் மற்றும் முற்றிலும் புதிதான ஒரு கதா பாத்திரத்தில் நடிக்க உள்ளார் ‘மன்மத ராசா’ பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான சாயசிங் மீண்டும் நடிக்க வருகிறார் .

இந்தப் படத்தில் மிக பெரிய ஆச்சிரியமே சண்டை இயக்குனர் திலிப் சுப்புராயன் தான், பலபடங்களில் பல்வேறு நடிகர்களை சண்டை காட்சிகளில் வில்ல தனம் பிழிய செய்த திலீப் இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். ருசி சேர்க்கும் வகையில் பிரபல சமையல் கலை நிபுணர் தாமோதரன் இந்தப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

சமீபகாலமாக எல்லோராலும் சிறப்பாக பாராட்ட படும் இளம் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இந்த படத்துக்கும் இசை மைக்கிறார் . P K வர்மா ஒளிபதிவு செய்ய பிரவீன் K .L படத்தொகுப்பில் , விதேஷ் கலை அரங்கம் நிர்மாணிக்கிறார்.

என் முதல் படமான ‘திருடன் போலீஸ்’ ரசிகர்கள் மத்தியிலும், திரை உலக பிரமுகர்கள் இடையேயும், ஊடகங்கள் இடையேயும் பெரும் வரவேற்ப்பு பெற்றது. அந்த ஆதரவுக்கு இந்த நேரத்தில் நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அந்த படத்தை தொடர்ந்தது எனக்கு மீண்டும் ‘உள்குத்து’ படம் மூலமாக இரண்டாவது படம் இயக்க வாய்ப்பு அளித்த Kenanya films செல்வ குமாருக்கும் உள்ளளவும் நன்றி ‘ என கூறினார் இயக்குனர் கார்த்திக்.