மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ( Operating System)விண்டோஸ் 10 வெளியிடப்பட்டு இரண்டு நாள்தான் ஆகிறது. அதற்குள் அதன் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. விண்டோஸ் அப்டேட்டின் போது வாடிக்கையாளர்களின் இன்டர்நெட் கனெக்ஷன் செலவில் அருகிலிருக்கும் மற்ற கணிணிகளுக்கும் டேட்டா அப்லோட் செய்ய ஆரம்பித்துள்ளது தான் காரணம்.

விஷயம் இதுதான். மைக்ரோசாப்ட் ‘விண்டோஸ் அப்டேட்’ எனப்படும் ‘சாப்ட்வேர் அப்டேட்’ அவ்வப்போது இன்டர்நெட் இணைப்பு மூலம் மைக்ரோசாப்ட் சர்வர்களிலிருந்து விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு டவுன்லோட் ஆகும். இதற்கான மைக்ரோசாப்ட் சர்வரை வாடிக்கையாளர்களின் லட்சக்கணக்கான கணிணிகள் இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்வதால் சர்வரின் லோடு தாங்காமல் போய்விடுகிறது.

இதற்கு மேலும் பல சர்வர்களை புதிதாய் அமைப்பதற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் இப்போது விண்டோஸ் அப்டேட்டை ‘டாரன்ட்’ எனப்படும் டவுன்லோடு-அப்லோடு முறைக்கு மாற்றிவிட்டது. டாரன்ட் ( torrent) எனப்படும் முறையில் ஒரு சாப்ட்வேரை நேரடியாக மைக்ரோசாப்ட் சர்வரிலிருந்து டவுன்லோட் செய்வதற்குப் பதிலாக ஏற்கனவே அதை சர்வரிலிருந்து டவுன்லோட் செய்து வைத்திருக்கும் ஒரு அருகாமை வாடிக்கையாளரின் கணிணியிலிருந்து டவுன்லோட் செய்ய அறிவுறுத்தப்படும். அந்த அருகாமை வாடிக்கையாளரின் கணிணியிலிருந்து புதிய வாடிக்கையாளருக்கு சாப்ட்வேர் அப்லோட் செய்யப்படும். இம்முறையில் அப்லோட் ஆகும் டேட்டா வாடிக்கையாளரின் இன்டர்நெட் செலவில் சேரும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இம்முறையில் வாடிக்கையாளர் கணிணி ஏதும் வேலை செய்யாமல் இருக்கும்போது கிடைக்கும் பேண்ட்வித்தை மட்டுமே அப்லோட் செய்ய உபயோகப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய இயங்குதளங்களில் இதுபோன்ற வசதி இருந்தது. ஆனால் அது ‘இன்ட்ராநெட்’ எனப்படும் சிறிய கம்பெனி நெட்வொர்க் போன்றவற்றில் செயல்பட்டது. அது சிறு கம்பெனிகளைப் பொறுத்தவரை நன்மையானதே. மேலும் இன்ட்ராநெட் பேண்ட்வித் இன்டர்நெட் பேண்ட்விட்த் போல செலவு வைப்பதல்ல; மற்றும் மிக எளிதானது.

ஆனால் இன்டர்நெட்டில் இருக்கும் தனிப்பட்ட வாடிக்கையாளர் கணிணிகளுக்கிடையே இதுபோன்ற டாரன்ட் பங்கீடு செய்வதானது தனது செலவை மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களின் தலையில் கட்டுவது போலாகும்.

Related Images: