அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற இருக்கிறது. மோடியின் அரசு தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை ராணுவத்துடன் போர்ப்பயிற்சி செய்ய இருக்கிறது. ஐ.நாவில் அமெரிக்கா இலங்கை்கு ஆதரவாக போடப்படும் தீர்மானத்தை மோடி ஆதரிக்கவிருக்கிறார். இப்போது அமெரிக்காவிற்கு போகவிருக்கிறார் மோடி. அதையொட்டி அந்நாட்டின் போயிங் நிறுவனத்திடமிருந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர் ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஓ.கே.செய்திருக்கிறது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான (சிசிஎஸ்) அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இம்முடிவின்படி அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 22 அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013-ம் ஆண்டில் மன்மோகன் ஆட்சியிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. மாட்டுச் சந்தை போல விலை நிர்ணயம் தொடர்பாக துண்டு இழுபறி 2 வருடங்கள் நடைபெற்றதால் நடைபெறவில்லை.இப்போது இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.16,500 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது போயிங் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள், ராடார்கள் மற்றும் மின்னணு போர்த்தளவாடங்களை வாங்குவது தொடர்பாகவும் ஒரு ஒப்பந்தம் அமெரிக்க அரசுடன் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
இந்தியாவின் ராணுவ தளவாட சந்தையைக் கைப்பற்றுவதற்காக, மத்திய அரசை அமெரிக்கா பல்வேறு வகைகளில் அழுத்தி வந்தது.

கடந்த 10 ஆண்டுகளில், பி-81 ரக கடற்பகுதி கண்காணிப்பு விமானங்கள், சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் சி-17 குளோப்மாஸ்டர்-3 ரக விமானங்கள் வாங்குவது உட்பட ரூ.66 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதை யாரைக் கேட்டு யாரிடம் டெண்டர் விட்டுச் செய்தார்கள் ? என்று மக்களாகிய நாம் கேட்க முடியாது. 600 ரூபாய் கேஸ் மானியத்தை விட்டுத் தா என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர மனிதனிடம் கேட்க முடிந்த அரசு, 16 ஆயிரம் கோடிக்கு ஹெலிகாப்டர் எல்லாம் வாங்கித் தானாகவேண்டுமா ? என்றும் கேட்க முடியாது. உடனே பாகிஸ்தான் தீவிரவாதம் என்று கைகாட்டுவார்கள். பாகிஸ்தானுக்கும் இதே அமெரிக்கா ஆயுதம் வழங்குகிறதே என்று யோசிக்கும் அளவுக்கு இங்கிருக்கும் தேசபக்திக் கொழுந்துகளுக்கு அறிவு இருப்பதில்லை.

Related Images: