ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளஸ் போன்களை, இதுவரை 10 மில்லியன் போன்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 24 மணிநேரத்திலேயே, 4.5 மில்லியன் பேர் போன்களை ஆர்டர் செய்து விட்டனர். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போன்களுக்கு, முதல்நாளில், 4 மில்லியன் போன்களே ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம், ஆப்பிள் நிறுவனம், தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளது.”

இந்த முறை சீனாவிலிருந்து பெருமளவில் முன்பதிவு ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. 3டி டச் திரையும், அதிக சக்தியான கேமராவும், பிராசசரும், ரோஸ் நிற கோல்ட் ப்ரேமும் போட்டு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஐபோன் 6 வகைகள் செப்டம்பர் 25ம் தேதி முதல் உலகெங்கும் 12 சந்தைகளில் விற்பனைக்கு வர இருக்கின்றன. சந்தைக்கு வருவதற்கு முன்பே அதற்கு முன்பதிவு வந்துவிட்டதாகக் காட்டுவது ஆப்பிள் போன்களின் விற்பனையை அதிகப்படுத்த உதவும் ஒரு மார்க்கெட்டிங் யுத்தியாகவும் இருக்கலாம்.

Related Images: