சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மதுரை பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த மோதலில் ஒரு புதிய திருப்பமாக, இந்திய பார் கவுன்சில் , 15 மதுரை வழக்கறிஞர்களின் பார் கவுன்சில் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மாநில பார் கவுன்சில் மதுரை வழக்கறிஞர்களுக்கு எதிரான ஒரு முடிவை எடுக்க தயக்கம் காட்டியதாக கருதி இந்திய பார் கவுன்சில் மதுரை வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த ரத்து குறித்து எந்தவித முன்னறிவிப்பும் மாநில பார் கவுன்சிலுக்கு கொடுக்கப்படவில்லை.பார் கவுன்சில் உரிமம் ரத்து செய்யப்பட்ட இந்த 15 வழக்கறிஞர்களும் கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தலைக்கவசங்கள் அணிவதற்கு எதிரான கருத்துக்களை பரப்பியதாகவும் கூறப்படுகிறது. தலைகவசம் அணிவதற்கு எதிர்ப்பு என்பது ஒரு பொறுப்பற்ற செயல் என்று இந்திய பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இவர்கள் மீது கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கண்டனப்பேரணி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டும் உள்ளது. மதுரை மாவட்ட பார் அசோசியேஷன் தலைவர் ஏ.கே. ராமசாமி ,செயலாளர் பி தர்மராஜ் , W பீட்டர் ரமேஷ் குமார் , VC சங்கரநாராயணன் , ஆறுமுகம்,A நெடுஞ்செழியன் , M திருநாவுக்கரசு , S கருணாநிதி, A சரவணன், P நடராஜன் , S வாஞ்சிநாதன் , S அய்யப்பராஜா , P அசோக் , J ராமமூர்த்தி மற்றும் CMஆறுமுகம் ஆகியோரது பார் கவுன்சில் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு பார் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர்கள் குழு நீதித்துறையில் இருக்கும் லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்த்துக் குரல் எழுப்பி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று ஏற்கனவே இருக்கும் சட்டத்தை மேலும் கடுமையாக்கி, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும், பெரிய கம்பெனிகளுக்கு நல்ல காசு கொடுக்கும் நீதிமன்றத்தை எதிர்த்து ஹெல்மெட் அணியாமலே ஊர்வலம் சென்று பரபரப்பை ஏற்படுத்தினர். இவற்றுக்காக இப்போது இவர்கள் மேல் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது பார் கவுன்சில்.

Related Images: