ஆந்திராவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளை இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது. கிருஷ்ணா டெல்டா பகுதியில் வறட்சியை போக்கும் வகையில் கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இணைப்புப் பணிகள் முடிவடைந்ததை குறிக்கும் விதமாக முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.

ஆந்திராவில் கிருஷ்ணா டெல்டா பகுதியில், போதுமான அளவு மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் வறட்சியை போக்க, கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான விழா, விஜயவாடா அருகே உள்ள இப்ராகிம்பட்டினத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பூஜைகளுடன் நதிகள் இணைப்பு நினைவு வளைவை திறந்து வைத்தார். இங்குதான் கோதாவரி நதி பாய்ந்து வருகிறது.

கோதாவரியில் இருந்து 80 டிஎம்சி தண்ணீரை 174 கி.மீ நீளமான கால்வாய் மூலம் கிருஷ்ணா நதியில் இணைப்பதுதான் இத்திட்டமாகும். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் மிகக்குறுகிய காலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான செலவு 1427 கோடி ரூபாய்களாகும். இதனால் கிருஷ்ணா மாவட்ட விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Images: