ஹஜ் யாத்திரையின்போது நேற்று சாத்தான் மீது கல் எறிதல் சடங்கின் போது 717 பேர் நெரிசலில் சிக்கி பலியாயினர். நடந்த விபத்தை நேரில் பார்த்த இந்தியா ஃப்ரடெர்னிட்டி ஃபோரம் என்ற அமைப்பின் உறுப்பினர் அமிர் சுல்தான் அதுபப்றிக் கூறியதாவது:

“இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் பேர் ஹஜ் பயணிகளாக மெக்காவுக்கு வந்தனர். இந்த புனித பயணத்தின் முக்கிய நிகழ்வான ‘சாத்தான் மீது கல் எறிதல்’ என்ற நிகழ்வு ஜம்ரத் என்ற இடத்தில் நடக்கும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மினாவில் இருந்து புறப்பட்டு செல்வார்கள். மினாவுக்கும் ஜம்ரத்துக்கும் இடையே 6 கி.மீ தூரம் உள்ளது. இந்த இடத்துக்கு செல்வதற்கு 6 சாலைகள் உள்ளன.

204-ம் எண் சாலையில் நடந்து செல்பவர்கள் மட்டும் செல்வார்கள். மற்றொன்றில் ரயில் மூலம் வருவார்கள். உள்ளே வரும் இந்த இரு பாதைகளுக்கும் ஒரே வெளியேறும் வழி உள்ளது. வியாழக்கிழமை மதியம் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இந்த வழியில் வந்ததால் கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக்கொண்டனர். சுமார் 40 டிகிரி செல்ஷியஸ் அளவில் வெயிலில் நெடுநேரம் நின்றதால் ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். ஒருவர் மீது ஒருவராக அடுக்கடுக்காக சாய்ந்து மயங்கி விழுந்தனர். சரியானபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இதில் ஏற்பட்ட நெரிசலில் 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக துபாய் அரசு தெரிவித் துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

நூற்றுக்கணக்கானவர்கள் மூச்சுத் திணறி மயங்கி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். சவூதி அரேபிய அரசு ராணுவம், போலீஸார், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடு பட்டனர். பலியானவர்களில் ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாட்டை சார்ந்தவர்களே அதிகம். இந்தியர்களின் எண்ணிக்கை குறைவே.” என்று சம்பவத்தை நேரில் பார்த்த அமிர் கூறியுள்ளார்.

Related Images: