திருமணம் வாழ்நாள் பந்தம் அல்ல ! – சல்மான் கான்.

திருமணம் என்பது வாழ்நாள் பந்தம் கிடையாது என்று நடிகர் சல்மான் கானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வணிக ரீதியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் புதிய தொடரை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். ‘டபுள் டிரபுள்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்படும் இந்த தொடருக்கான அறிமுக விழாவில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சல்மான் கான் பதில் அளித்தார்.

தொடரின் தலைப்பு டபுள் என்று ஆரம்பிக்கின்றதே, நீங்கள் எப்போது டபுள் ஆகப்போகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான், ‘மைனே பியார் கியா’ படத்தின்போதே நான் டபுள் ஆகிவிட்டேன். தற்போது ‘சுல்தான்’ படத்துக்காக ‘டிரிபுள்’ ஆகப்போகிறேன் என சிரித்தபடி கூறினார். நாம் வாழும் தலைமுறையில் திருமணம் என்பது வாழ்நாள் பந்தமாக இருப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். நான் தற்காலிகமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிறீர்களா? அல்லது, நிரந்தரமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று செய்தியாளர்களை பார்த்து சல்மான் கான் கேள்வி எழுப்பினார்.

திருமண பந்தம் குறித்த அவரது விமர்சனம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.