ஜப்பானின் யமஹா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவிற்கு வந்தபோது அறிமுகமான யமஹா 100 சிசி மோட்டார் சைக்கிள்கள் இப்போதும் கூட டிமாண்ட் உள்ளவை. வேகத்துக்குப் பெயர் போன யமாஹா விரைவில் தமிழகத்தில் தனது உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது யமஹா நிறுவனம்.

ஏற்கனவே உத்தரப் பிரதேசம் சூராஜ்பூரிலும், ஹரியானா பரீதாபாத்திலும் தொழிற்சாலைகள் யமஹா நிறுவனத்துக்கு இருக்கின்றன. தற்போது மூன்றாவதாக தமிழகத்தில் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது யமாஹை.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகல் எனுமிடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. மே 2012-லேயே தமிழக அரசுடன் இது சம்பந்தமாக ஒப்பந்தம் செய்துள்ளது யமாஹா. மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள், இயந்திரங்களை நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் பூர்த்தியாகிவிட்டன. தற்போது சோதனை ரீதியில் இங்கு வாகன உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

180 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை ரூ. 1,500 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசின் பங்கு பாதிக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. ஆண்டுக்கு 4.5 லட்சம் மோட்டார் சைக்கிள்களை இங்கு உற்பத்தி செய்யலாம். இந்த ஆலை மூலம் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கலாம். அதில் பெர்மனன்ட் எத்தனை அப்ரண்டீஸ் எத்தனை என்று பார்த்தால் உண்மை நிலை தெரியும். இந்த ஆலையுடன் இணைந்து மோட்டார் சைக்கிள்களுக்கு உதிரிபாக சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கான வெண்டர் பார்க் அமைந்துள்ளது. இந்த உதிரிபாக சப்ளை நிறுவனங்கள் ஏறக்குறைய ரூ. 1,000 கோடியை முதலீடு செய்துள்ளன. இந்த உதிரிபாக நிறுவனங்கள் மூலம் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிலும் அப்ரன்டீஸ்கள், வாரக்கூலிகளே அதிகம் இருப்பார்கள்.

இந்த ஆலையில் தண்ணீர் வீணாகாத வகையில் மறு சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை வைத்திருப்பதாக யமாஹா நிறுவனம் கூறுகிறது. பெரும்பாலான கட்டிடங்களுக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஆற்றலிலிருந்து பெறப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய ஆலையில் மோட்டார் சைக்கிள் உற்பத்தி 18 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே உள்ள இரண்டு ஆலை களின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் மோட்டார் சைக்கிள்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. புதிய ஆலையானது இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளில் மிகவும் பெரியதாகும்.
விரைவில் யமஹா நிறுவனம் நானோ மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய மோட்டார் சைக்கிள் விலை ரூ. 30 ஆயிரமாக இருக்கலாம். இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க சந்தைக்காகவும் மோட்டார் சைக்கிள்கள் இங்கு தயாராகும்.

புதிய ஆலையில் 60 ஏக்கர் நிலம் பிற உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜப்பா னிய நிறுவனங்கள் ஆலையை அமைத் துள்ளன. இதில் சஸ்பென்ஷன் தயாரிக்கும் கேஒய்பி (கயாபா), சகுரா நிறுவனங்களும் அடங்கும். உள்ளூர் கம்பெனிகள் எல்லாம் தினக்கூலி அடிப்படையில் அவுட்சோர்சிங் செய்யும் வேலைகளுக்கு வாய்பிளந்து நிற்கவேண்டியதுதான்.

Related Images: