25 வருடங்களாக சர்வதேசப் போலீசாலும், இந்தியாவில் சி.பி.ஐ, ரா உட்பட பல்வேறு வகையான போலீசால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தாலும் உலகம் பூராவும் ஹாயாகச் சுற்றித் திரிந்த சோட்டா ராஜனை இந்தியா விரட்டிச் சென்று இந்தோனேசியாவின் பாலியில் கைது செய்ததாக செய்தி வெளியானது. ஆனால் தான் சரணடையவில்லை என்றும் இந்தியா திரும்ப விரும்பியதாகவும் சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.

கொலை, போதைப்பொருள் கடத்தல், குண்டுவெடிப்பு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்படும் சோட்டா ராஜன், ஒரு செயின் திருடனைப் போல போலீஸ் விரட்டிச் சென்று கைது செய்யப்படவில்லை. மாறாக, நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் இந்திய பாதுகாப்பு படையினருடன் மேற்கொண்ட ரகசிய ஒப்பந்தத்தின் விளைவாகவே அவர் இந்தியா வர ஒப்புதல் தெரிவித்துள்ளார் என்பது போல் தெரிகிறது.

ஆஸ்திரேலிய அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்தோனேசிய போலீஸ் சோட்டா ராஜனை கைது செய்த போது, மோகன் குமார் என்ற போலி பாஸ்போர்ட்டில் சோட்டா ராஜன் பயணித்திருக்கிறார்.

இப்படி இஸ்லாமியத் தீவிரவாதிகள் பிடிபட்டால் தான் அல்லது பிடிபட்டதாகச் செய்திகள் வந்தால் தான் அது மோடி அரசின் இந்துத்துவா விஷயங்களுக்கு தீனி போடும் விஷயமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு தீவிரவாதிக்கு அரசு இவ்வளவு பயந்து, அவர் தான் சரணடையவில்லை என்று சொல்லுமளவிற்கு அவருக்கு தைரியம் கொடுத்திருப்பது எது ?

போட்டோவில் அவர் போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தால் ரசிகருடன் ஒரு பிரபலம் போட்டோ எடுத்துக் கொள்வது போலத் தான் இருக்கிறது.

Related Images: