“பேரை மாத்த சொன்னது குத்தமாய்யா”, ரஜினிக்கு அடுத்த சிக்கல்

என்னடா பொழுதுபோச்சே இன்னமும் யாரும் கெளம்பலையேன்னு பாத்தேன், கெளம்பிட்டாங்க. இ.த.கட்சி ஒருங்கிணைப்பாளரிடமிருந்து நமக்கு ஒரு பத்திரிக்கை செய்தி வந்திருக்கிறது. இதனால சகலருக்கும் அவங்க அறிவிக்கிறது என்னன்னா, ரஜினியின் மருமகன் தனுஷ் ‘நானும் ரவுடிதான்’ படத்தை தயாரித்திருக்கிறார். அந்தப் படத்தின் வினியோக உரிமையை, ராஜபக்சேவின் உறவினரான ‘லைக்கா’வின் அல்லிராஜாவுக்கு விற்பனை செய்ததை அவுங்க கண்டிக்கிறாங்களாம்.

கத்தி படத்துக்கும் இதேமாதிரியான பிரச்னை வந்தபோது, தமிழ்நாடு இயக்குநர் சங்கத்தின் சார்பாக இனிமேல் எந்த படமும் லைக்கா நிறுவனத்துடன் வணிகதொடர்பு கொள்ளாது என உறுதிமொழி கொடுக்கப்பட்டதாம். சொன்ன சொல்லை கடைபிடிக்காம, இப்புடி பண்றீங்களே நியாயமா என இ.த.க. போராட்டத்தில் இறங்க இருக்கிறது.

இலங்கை அரசுமீது பொருளாதார தடைவேண்டும் என்று தமிழக அரசு இயற்றிய தீர்மானம், தமிழ் சினிமாவுக்கும் பொருந்தும். எனவே, லைக்காவுடனான ஒட்டு உறவு எல்லாவற்றையும் தனுஷ் அத்துவுடணும், இல்லேன்னா நாங்க களத்துல இறங்க வேண்டியிருக்கும்னு இவுங்க அறிக்கை சொல்லுது. அதுமட்டுமா, நாங்க தனியாளு இல்ல, தோப்பு. எங்க பின்னாடி, த.மு.க., த.வா.க., த.வி.க., உள்ளிட்ட கட்சிகளும்; த.பெ.தி.க., மே17, ம.நா.த.இ., பா.மா.இ. பொ.மா.கூ. போன்ற இயக்கங்களும் இருக்காங்க. முதல்கட்டமா, ரஜினி வீட்டுக்கு நேர்ல போய் எச்சரிக்கை கடிதம் தரப்போறாங்களாம்.

நான் கேள்விபட்டவரைக்கும் தனுஷ் வீட்டோட மாப்பிள்ளையா இருக்குற‌மாதிரி எதுவும் நியூஸ் இல்லை. அப்புறம் ஏன் இவுங்க ரஜினி வீட்டுக்குப்போய் எச்சரிக்கை பண்ணனும்னு சத்தியமா தெரியலை. நல்லவேளை இப்போதைக்கு இவுங்க கண்ணுல ‘நானும் ரவுடிதான்’ மட்டும்தான் சிக்கியிருக்கு. வெற்றிமாறனின் ‘விசாரணை’ பாலாவின் ‘தாரை தப்பட்டை’னு க்யூ ரொம்ப பெரிசா இருக்கு. அறிக்கையோட சாராம்சத்தை உங்ககிட்ட குடுத்துட்டோம். இப்ப இதுக்கு நீங்க கருத்து சொல்லனுமா இல்லையா? அது அவுங்க கன்டினியு, இனி உங்க கன்டினியு.

ஐ, ஜாலி ஜாலி. நிறைய ஸ்கூப் நியூஸ் வெயிட்டிங்.