சர்வதேச கால்பந்து அமைப்பான பிபா (FIFA) வின் தலைவரான செப் பிளாட்டர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு பிளாட்டரையும், செயலாளர் ஜெரோம் வால்கேவையும் மற்றும் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தலைவரான மிஷேல் பிளாட்டினி ஆகியோரை 90 நாட்கள் இடைநீக்கம் செய்துள்ளது.

விளையாட்டுக்கள் சரியான பிஸினெஸ்ஸாக மாறி வருவதை நிரூபிக்கிறது கால்பந்து சம்மேளனம். இவர்களைத் தவிர ஃபிஃபாவின் முன்னாள் தலைவரான தென் கொரியாவின் சுங் மொங்-ஜூனுக்கு ஆறு ஆண்டுகள் தடையும் ஒரு லட்சம் சுவிஸ் பிராங்குகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

79 வயதாகும் செப் பிளாட்டர், லஞ்சம் வாங்கிக் கொண்டு ஃபிஃபாவுக்கு சாதகமில்லாத ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார். அத்தோடு பிளாட்ட்டினிக்கு கருப்புப் பணத்தை முறையின்றி நிதியாக அளித்திருக்கிறார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செப் பிளாட்டருக்கு ஆலோசகராக இருந்த பிளாட்டினிக்கு இரண்டு மில்லியன் யூரோக்கள் கொடுத்திருக்கிறார் பிளாட்டர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தப் பணம் அவ்வப்போது பிளாட்டினிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜெரோம் வால்கே உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை முறைகேடான வகையில் வழங்கி இலாபம் ஈட்டினார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

வரும் 2018 மற்றும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த உரிமம் கொடுப்பதிலும் ஊழல் நடந்துள்ளது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவை எல்லாவற்றையும் ஸ்விஸ் அரசு இப்போது விசாரித்து வருகிறது.

ஐ.பி.எல் மட்டும் தான் ஊழல் என்று நினைத்தவர்களுக்கு போனஸாக வந்திருக்கிறது இந்த பிபா கால்பந்து ஊழல். ஊழலே இல்லாத விளையாட்டு என்று ஏதும் இருக்குமா ?

Related Images: