மும்பையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவை எதிர்த்து, அதன் ஏற்பாட்டாளர் குல்கர்னியின் முகத்தில் கறுப்பு மை பூசிய ஆறு சிவ சேனை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் உடனே பெயிலில் விடுவிக்கப்பட்டனர்.

மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா நடக்கவிருந்த நிலையில், ‘பாகிஸ்தானியின் புத்தகத்தை இங்கே வெளியிடாதே’ என்று, எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து வலதுசாரி இயக்கமான சிவசேனைக் கட்சியினர், இதன் ஏற்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னியின் முகத்தில் கறுப்பு மை பூசினர். ஆனால் அவரோ முகத்தில் அந்த மையை அப்படியே அழிக்காமல் மேடைக்கு வந்து, புத்தகத்தை வெளியிட்டு, வெறுப்புணர்வை வளர்க்கவேண்டாம் என்று சிவசேனைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.

சிவசேனையின் இந்த அராஜகத்தைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியும் இந்த சம்பவத்தைக் கண்டித்தார். இதனையடுத்து சிவசேனை புத்தக வெளியீட்டு விழாவின்போது நடத்தத் திட்டமிட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை விலக்கிக்கொண்டது. ஆனாலும் சிவசேனையின் தலைவர் சிவசேனை அலுவலகத்தில் அந்த 6 பேரையும் அழைத்து சந்தித்து அவர்களின் துணிவான செயலைப் பாராட்டினார்.

இவை பற்றி முதன்முறையாக வாய் திறந்த மோடியும் ‘வருத்தம்’ மட்டுமே தெரிவித்தார். மேலும் இதற்கு அரசு என்ன செய்யும் என்றும் கேட்டார். ஆர்.எஸ்.எஸ்.ம், சிவசேனையும், பா.ஜ.கவின் பங்காளிகள் அல்லவா ? அதை எப்படி மோடி சொல்ல மறந்தார் ? சிவசேனையை கண்டித்து ஏன் மோடி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை ? கட்சியை விட்டு தள்ளிவைத்துவிடுவார்கள் என்று பயமா ? இல்லை ‘நான் தடுப்பது போல தடுக்கிறேன். நீ விருப்பம் போல அடித்து நொறுக்கு’ என்கிற ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யின் டெக்னிக்கா ?

Related Images: