`என்னென்னமோ நடக்குது` குழப்பத்தின் கோரப்பிடியில் மணிரத்னம்

தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்து துவண்டு போயிருந்த நிலையில் ஓரளவு சுமாரான வெற்றி பெற்று மணிரத்னத்தின் மானம் காத்த படம் `ஓ காதல் கண்மணி`.

அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியதுதான். ஆனால் கடந்த ஆறு மாதங்களாகவே தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கும்மியடித்துக் கொண்டிருக்கிறார் மணி.

தனது அடுத்த படத்துக்கு முதலில் மேற்படி ஓ.கே.கண்மணி ஜோடிகளையே ஓகே செய்தவர், அடுத்த கொஞ்ச நாளில் கார்த்தியையும், நடிகை கீர்த்தியையும் உள்ளே கொண்டு வந்தார். இன்னும் சில தினங்கள் கழித்து தெலுங்கு நடிகர் நானியும் ஸ்ருதியும் உள்ளே வர, துல்கரும், நித்யாவும் வெளியே போனார்கள்.

கடந்த வார நிலவரப்படி மணி தனுஷிடமும் இந்தி நடிகை சோனத்திடமும் பேசி வருவதாக ஒரு தகவல். விரைவில் தங்கர் பச்சானை மணிரத்னம் அலுவலகத்துக்கு அனுப்பு `ஏங்க என்னங்க நடக்குது இங்க? என்று பொங்க வைத்தால்தான் மணி ஒரு முடிவுக்கு வருவார் போல.