சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்துவிட்டார் ஸ்ருதி. அதற்கான அட்வான்சும் கொடுக்கப்பட்டுவிட்டது.

இத்தனைக்கும் கமல் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டாரல்லவா? அதற்கப்புறம் நடந்த சம்பவம் இது. திடீரென என்ன நடந்ததோ? “இந்த படத்தில் என்னால் நடிக்க இயலாது” என்று கூறி, அட்வான்சை திருப்பி அனுப்பிவிட்டார் ஸ்ருதி. கதையை கேட்டுவிட்டு அவ்வளவு தூரம் ரசித்தவர், திடீரென மனம் மாற என்ன காரணம்?

திரும்ப திரும்ப யோசித்தாலும் திருப்தியான பதில் வராததால், “நீங்க நடிக்கலேன்னாலும் பரவால்ல. ஏன் அட்வான்சை திருப்பி அனுப்புனீங்க, வெளிப்படையா சொல்லிடுங்களேன்?” என்று கேட்கப்பட்டதாம். எதற்கும் அவரிடம் முறையான பதிலில்லை என்கிறார்கள். அதனால், கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிவிட்டார்.

Related Images: