மூளை நரம்புகள் பலம் பெற..

மூளை நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மறதி போன்ற நோய்களுக்கு நாயுருவி வேர் மற்றும் கரிசலாங்கன்னி வேர் இரண்டின் சாறையும் கலந்து பருக மூளை சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்

தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகவும்.

சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும். நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

மஞ்சளில் உள்ள குர்குமின், வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோயைச் சரியாக்கும். தினமும், சிறிதளவு மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மனம் தொடர்பான மாற்றங்கள் ஏதேனும் வந்தால்கூட சரிசெய்யும். மூளையில் உள்ள வளர்ச்சி ஹார்மோனின் (BDNF) செயல்பாட்டை ஊக்குவிக்கும். புதிதாக நியூரான்கள் வளர்வதற்கு உதவும். அதிகமாக மஞ்சள் உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தப்பை பிரச்னைகள் வரலாம்.