ரொம்ப காஸ்ட்லியான விவாகரத்து !

47 வயதாகும் ரஷ்ய கோடீஸ்வரரான டிமிட்ரி ரைபோலேவேவ் என்பவர் தனது மனைவி எலினாவை கடந்த 2014-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

ஸ்விஸ் கோர்ட்டில் நடந்த வழக்கில் 4.2 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 26 ஆயிரத்து 400 கோடி) ஜீவனாம்சமாகத் தரவேண்டும் என்று எலினா கோரியிருந்தார். அந்தப் பேச்சு வார்த்தை இப்போது தான் சுமூகமாக முடிந்திருக்கிறது.

2010-ஆம் ஆண்டில் 6.5 பில்லியன் டாலராக இருந்த டிமிட்ரி ரைபோலேவேவின் சொத்துமதிப்பு தற்போது 100 பில்லியன் டலர் ஆக மாறியிருக்கிறது. (எப்படிங்க ? ஆங். அதாங்க பிஸ்னஸ்.).
இதில் எலினாவுக்கு 4.2 பில்லியன் டாலர் சுவிஸ் பிராங்க்ஸ் வழங்க நீதிபதி தீர்ப்பு வழங்கிய சில நிமிடங்களில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவனாம்ச தொகைக்கு ஈடான பத்திரத்தை எலீனாவுக்கு டிமிட்ரி வழங்கினார்.

26 ஆயிரம் கோடி ரூபாயை வெச்சுக்கிட்டு பாவம் இந்தம்மா எவ்வளவு கஷ்டப்படும் புருசன் இல்லாமல்? சே !