ஐ.பி.எல்லில் ஷாருக்கான் ஊழல் செய்தாரா?

ஐபிஎல் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பங்குகளை விற்றதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், தெற்கு மும்பையில் பல்லார்டு எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை ஷாருக் கானுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இதன்படி காலையில் ஆஜரான அவரிடம் அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை மீறி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் (கேஆர்எஸ்பிஎல்) பங்குகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான கேஆர்எஸ்பிஎல் பங்குகள், 2009-ம் ஆண்டில் மொரீஷியஸில் உள்ள ஜூகி சாவ்லா கணவர் ஜெய மேத்தாவுக்கு சொந்தமான, சீ ஐலேண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (எஸ்ஐஐஎல்) நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஹஸ்பெண்ட் கம்பெனியிலிருந்து வொய்ப் கம்பெனிக்கு. 76 ரூபாய் ஷேர் விலை 10 ரூபாய் தான்.

இந்த விற்பனையில் முறைகேடு எதுவும் இல்லை என்று ஷாருக்கான் தெரிவித்திருக்கிறாராம். சரி அது ஏன் கம்பெனியை இந்தியாவில் ரிஜிஸ்டர் செய்யாமல் இந்தியாவுக்கு பக்கத்து தீவு நாடான இத்தினியூண்டு மொரிஷியஸில் ரிஜிஸ்டர் பண்ணியிருக்கிறார்கள்? மொரிஷியஸ் தீவில் கம்பெனி வெச்சிருந்தா டாக்ஸ், கீக்ஸ் எதுவும் கடுகளவும் கிடையாது. எல்லாக் காசும் கம்பெனிக்கே.

மேலும் இந்தியாவில் கம்பெனி வைக்குமளவு இடம் இல்லாததால் மொரிஷியஸில் வைக்க நேர்ந்தது என்கிறார்கள். இருக்கும். இருக்கும்.