ஒண்ணும் புரியலையே உலக நாயகா?

இப்போதெல்லாம் கமலின் திடீர் சந்திப்புகள் ஆச்சர்யத்தையும், சந்தேகத்தையும் கிளப்பி வருகிறது. சமீபத்தில் சிவசேனவை சேர்ந்த ராஜ்தாக்ரேவை சந்தித்து வந்தார்.  ஆனால் அதற்கான உண்மைக்காரணம் தெரியாத்தால் கண்ணு மூக்கு வைத்து தற்போது வரை பல கதைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாத கமல், தலாய் லாமாவை சந்தித்திருக்கிறார். ஆன்மீகம் மீது சற்றும் ஈடுபாடு இல்லாத கமல்ஹாசன், திபெத்திய புத்த மத துறவியான தலாய் லாமாவை கௌதமியோடு சென்று சந்தித்தது ஏன் என  சந்தேகத்தை விதைத்திருக்கிறார் கமல்.

‘காந்தியின் ரசிகனாக இருக்கும் நான், தலாய் லாமாவின் கருத்துகளை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை’.’எனக்கு எப்படி ஆன்மீகத்தின் மீது நாட்டம் இல்லையோ, அதேபோல தலாய் லாமாவிற்கு சினிமா மீது நாட்டம் இல்லை. அவர் இதுவரை ஒரு திரைபடத்தை கூட பார்த்ததில்லையாம்’.”அகிம்சையின் பால் எனக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவரிடம் உரைத்தேன், விரைவில் அந்த திசையில் பயணிப்பேன்” என தனது அக்மார்க் குளப்ப வார்த்தைகளையே உதிர்த்திருக்கிறார் கமல்.

உங்க கருத்துக்களைப்போல இந்த சந்திப்புகள் ஏன் என்று புரியலே உலக நாயகா..