திரும்பி பார்க்காம போயிடுங்க…இயக்குநர்களை துரத்தும் தன்ஷிகா

பரதேசியில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்த தன்ஷிகா, திறந்திடு சீசே படத்தில் முழு நேர குடிகாரன்களை திருத்தும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த நடிப்பைப்பார்த்து விட்டுத்தான் அவரை கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க புக் பண்ணியிருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.

ஆக, இத்தனை சீக்கிரத்தில் தனக்கு ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்காத தன்ஷிகா, அப்படத்தில் ரஜினியின் மகளாக மிகுந்த உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், கபாலிக்கு பிறகு தன்ஷிகாவின் மார்க்கெட் எகிறி விடும் என்று நினைத்த சில டைரக்டர்கள் அவரை அடுத்தடுத்து புக் பண்ண வட்டமிட்டு வருகின்றனர். ஆனால், தன்ஷிகாவோ அப்படி தன்னை புக் பண்ண வந்தவர்கள் சிறிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க சொன்னதால் எந்த படத்தையும் ஒத்துக்கொள்ளவில்லையாம். கபாலிக்கு பிறகு நான் பெரிய நடிகையாகி விடுவேன். அப்போது பெரிய ஹீரோக்களின் படங்களே எனக்கு கிடைக்கும் என்று சொன்னவர், பெரிய ஹீரோக்கள் உங்கள் படங்களில் நடிப்பதாக இருந்தால் சொல்லுங்கள். இல்லையேல் திரும்பிப்பார்க்காமல் போய்க் கொண்டேயிருங்கள் என்று கூறிவிட்டாராம் தன்ஷிகா.