நயன்தாரவுக்காக மதம் மாறிய விக்னேஷ் விக்டர்

இந்த பிறந்தநாளுக்கு நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை கூட பரிமாறிக் கொள்ளவில்லையாம் தமிழின் முன்னணி ஹீரோக்கள்.  அம்புட்டு கோவம் அவர் மேல! அதுக்கெல்லாம் கவலைப்படுகிற ஆளா  நயன் தாரா? சென்னையிலேயே இல்லை. அவர் பிறந்த திருநாளில் சென்னையில் இருக்கிற சிலருக்கு மட்டும் அதிர்ஷ்டம். அவரே போன் பண்ணி ஆசிர்வாதங்களை வாங்கிக் கொண்டு எங்கோ பறந்துவிட்டார். அவர் போப் ஆண்டவரை சந்தித்து ஆசி பெற்றதாக செய்திகள் கசிந்தாலும், அது உட்டாலக்கடியா? அல்லது உண்மையா? என்பதை அவரே ஒப்புக் கொண்டால்தான் உண்டு!

இருந்தாலும், ‘நயன்தாரா பிறந்த நாளில் போப்புடன் சந்திப்பு’ என்கிற தலைப்பு செய்தியை மட்டும் தன்னுடைய ட்விட்டரில் ஷேர் பண்ணியிருக்கிறார். ஒருவேளை ட்விட்டர் கணக்கே அவருடையதாக இல்லாமலிருக்கலாம். யார் கண்டது? நயன்தாராவை போலவேதான் அவர் பற்றிய செய்திகளிலும் மர்மங்கள் கொட்டிக் கிடக்கிறது! அப்படியும் அவரும் அவரது அன்புக் காதலர் விக்னேஷ் சிவனும் ஜோடியாகதான் சென்றார்கள் என்று இன்னொரு போட்டோ ஆதாரமும் உலவுகிறது கோடம்பாக்கத்தில்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், தனது காதலி நடிகை நயன் தாராவுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டார் என்பதாக தகவல். ஏற்கனவே, நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு பிஎம்டபிள்யூ காரும், பெசண்ட் நகரில் வீடும் வாங்கிக் கொடுத்தார். மேலும் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், யாராவது ஒருவர் மதம் மாற வேண்டுமே! ஏற்கனவே, இயக்குனர் பிரபுதேவாவை  திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா. அதன் பின் அந்த காதல் முறிந்ததும், மீண்டும் தனது தாய் மதத்திற்கே திரும்பினார். சமீபத்தில் ரோம் சென்று அங்கு போப்பை சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது நயன்தாராவுடன் சென்றிருந்த விக்னேஷ் சிவன், ரோமிலேயே கிருஸ்துவ மதத்துக்கு மாறி விட்டர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.  நயன்தாரா அவரின் பெயரையும் விக்டர் என்று மாற்றிவிட்டார்.

தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவனை எல்லோரும் விக்கி என்று அழைக்கிறார்கள். விக்டர் என்ற பெயரையும் சுருக்கமாக விக்கி என்று அழைக்கலாம். எனவே இந்த பெயர் அவருக்கு பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும் என்று நினைத்தாராம் நயன்தாரா. அதனாலேயே விக்னேஷ் சிவன் இப்போது விக்டர் ஆனார்.