பயத்தில் சுதாரித்துக் கொண்ட ரஜினி!

கதை எப்படி நகர்கிறதோ, அப்படியேதான் படப்பிடிப்பு நடத்தி பழக்கப்பட்டிருக்கிறார் டைரக்டர் பா.ரஞ்சித். சிலர் க்ளைமாக்சை முதலில் எடுப்பார்கள். இவர் அப்படியல்ல! புரிஞ்சுருச்சு… மேல? சில நேரங்களில் ரஜினி சம்பந்தமான ஒரு காட்சியை எடுத்துவிட்டு, அதற்கு அடுத்து வரும் இன்னொரு காட்சிக்காக வேறு நடிகரை வைத்து இயக்குகிற சங்கடமான சுச்சுவேஷன்தான் அது. அப்படி ரஜினி பல மணி நேரங்கள் கூட காத்திருக்க நேரிடுகிறதாம். அப்போதெல்லாம் நெளிசல் வழிசலோடு ரஜினியை அணுகும் ரஞ்சித், “சார்… நீங்க கேரவேன்ல வெயிட் பண்றீங்களா?” என்று கேட்டால், “நோ பிராப்ளம். டேக் யுவர் ஓன் டைம்” என்கிறாராம் ரஜினி. இப்படி அரை நாளெல்லாம் காக்க வைக்கப்பட்டிருக்கிறார் ரஜினி. அந்த நேரத்தில் தான் தன்னை காண வரும் மக்களை சந்திந்து வந்தார்.

தாமதமாக நிதானித்துக் கொண்ட ரஜினி,  எங்கே ரசிகர்களால் படத்தை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்துவிடுமா என்று அஞ்சி, இனி படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் மட்டும் ரசிகர்கள் தன்னை பார்க்க வரவேண்டாம் என உத்தரவு போட்டுள்ளாராம்.