விஜய்-அட்லீ பட டைட்டில் அதுவா? இதுவா?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று நள்ளிரவு 12.00 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

வெற்றி, காக்கி, தாறுமாறு, என இப்படத்தின் டைட்டில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது வேறொரு புதிய டைட்டிலை வெளியிட முடிவு செய்துள்ளனராம் இப்படக் குழுவினர். தற்போது வந்த தகவல்களின்படி இப்படத்தின் டைட்டில் “விஜயகுமார் IPS” என கூறப்படுகிறது.

கேப்டனின் “சேதுபதி IPS” மற்றும் விஜயசாந்தி நடித்த “வைஜெயந்தி IPS” போன்ற வெற்றிப் படங்களின் பாதிப்பில் விஜய்யின் இப்படத்திற்கு ‘விஜய்குமார் IPS’ என வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

கடவுளே.. இது உண்மையாக இருக்கக்கூடாது என்பதுதான் இதை படிக்கும் விஜய் ரசிகர்களின் பிரார்த்தணையாக இருக்கும். இல்லையா..?