விஜய் சேதுபதி- தனுஷ் உறவும், சிவகார்த்திகேயன்- தனுஷ் பிரிவும் சினிமா வட்டாரத்தில் அடிக்கடி முணுமுணுக்கப்படுகின்றன.

அதன் அடுத்த கட்டம் தான் இந்த சங்கதி… சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தர்மதுரை படத் தலைப்பையே செலக்ட் பண்ணினார் சீனு. ஆனால் ரஜினியிடம் நோ அப்ஜெக்ஷன் வாங்க வேண்டுமே? எவ்வித சிரமமும் வைக்கவில்லையாம் தனுஷ். அவரே முன் நின்று ரஜினியிடம் பேசி அந்த தலைப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

Related Images: