Remnants of a downed Ukrainian army aircraft Il-76 at the airport near Luhansk, Ukraine, Saturday, June 14, 2014. Pro-Russian separatists shot down the military transport plane Saturday in the country???s restive east, killing all 49 service personnel on board, Ukrainian officials said. (AP Photo/Evgeniy Maloletka)

ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் 321 ரக விமானம் ஒன்று சனிக்கிழமையன்று சைனாய் தீபகற்பத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது நடுவானில் சிதறியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 224 பேர் கொல்லப்பட்டனர். விமானத்தின் பாகங்கள் 15 கி.மீ சுற்றளவுக்கு சிதறிக் கிடந்தன.

ஐ.எஸ். தீவிரவாதிகள் இவ்விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தனர். அதை தற்போது அதிகாரிகள் மறுக்கின்றனர். வெளிக் காரணிகளாலேயே இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கும் நிறுவனமான கொகலிமாவிய தெரிவித்திருந்தது.

ஆனால், இது எந்த உறுதியான தகவலின் அடிப்படையிலும் சொல்லப்படவில்லை என்று தேசிய விமான முகாமையின் தலைவரான அலெக்ஸாந்தர் நெரத்கோ தெரிவித்தார்.

“ஐஎஸ் குழுவினால் விமானம் வீழ்த்தப்படுவதாகச் செய்யப்படும் பிரச்சாரம், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கான ஒரு வழியாகும். சைனாய் தீபகற்பம், குறிப்பாக அந்தப் பகுதி எங்களுடைய முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறது” என எகிப்து அதிபர் அல் சிசி கூறுகிறார். விமானம் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சுடப்பட்டதா இல்லையா என்பதை வெளிப்படையாகச் சொல்ல ஏன் அரசுகள் மறுக்கின்றன என்பது புதிராக இருக்கிறது.

Related Images: