தமது கல்லீரலில் 25 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில் உயிர் வாழ்ந்து வருவதாக, இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஹெபாடைட்டிஸ் என்கிற வைரஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர், ஒரு விபத்தின்போது தானமாக பெறப்பட்ட ரத்தம் தமக்கு ஏற்றப்பட்டதாகவும், அதன் மூலமாக ஹெபாடைட்டிஸ் பி வைரஸ் பரவி, நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் கூறினார்.

இதன் காரணமாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அமிதாப் பச்சன் தெரிவித்தார். ஒரு மருத்துவப் பரிசோதனையின்போதே, 25 சதவீத கல்லீரலில் தாம் வாழ்ந்து கொண்டிருப்பது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 12 சதவீத அளவுக்கு கல்லீரல் இருந்தால்கூட உயிர்வாழ முடியும் என்றாலும், அத்தகைய நிலை யாரும் விரும்பத்தக்கது அல்ல என்றும் அமிதாப் பச்சன் கூறினார்.

 

Related Images: