ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு மதத்தைப் போதிப்பது குற்றம் என விரைவில் சட்டம் வரப்போகிறதாம்.

இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பவர் ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல். இரண்டு கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவில் பல மதத்து மற்றும் பல கலாச்சார மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி அவர் கூறுகையில், “இனிமேல் நம் குழந்தைகளுக்க ஆபத்தான, காலாவதியான (மதக்)கருத்துக்களை கற்பிக்க, நமது நாட்டைப் பிரிக்க அனுமதிக்கமாட்டோம்” என்றார்.

உடனே நாடெங்கும் இது பலத்த எதிர்ப்புகளைக் கிளப்பயுள்ளது. இது தனி மனித சுதந்திரத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் அரசின் கொள்கை முடிவுகளில் மத ரீதியான கருத்துக்கள் தாக்கம் செலுத்துவதை இது தடுக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

பொதுவாகப் பார்த்தால் இது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமான செயலே. எல்லோரும் படிக்கும் அரசுப் பள்ளி நிறுவனங்களில், அது போன்ற பொதுக் கல்வி நிறுவனங்களில் சிறு குழந்தைகளுக்கு மதம் சம்பந்தப்பட்ட பாடங்களைத் தவிர்த்தல் மிக நல்லது தான். அதே நேரத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை அறிமுகப்படுத்த, கடைப்பிடிக்கச் செய்ய எல்லாவித உரிமைகளும் உண்டு. அதற்குள் தலையிடுவது என்பது தனிமனித உரிமைகள், குடும்ப உரிமைகள் மற்றும் கலாச்சார உரிமைகளுக்குள் அரசு எல்லை மீறித் தலையிடுவதாக அமையும்.

Related Images: