பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி – ரொம்ப முக்கியம் !

பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் ஒலியை விட வேகமாக எல்லையை ஊடுருவி விடுவதால், அவர்களை தடுக்கும் பொருட்டு ஒலியைவிட அதிக வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன்கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் டெஸ்ட் செய்யப்பட்டது இந்த ஏவுகணை. மொபைல் அட்டானமஸ் லாஞ்சர் (Mobile Autonomous Launcher) என்கிற தொழில் நுட்பம் மூலம் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் சுதிர் மிஹ்ரா கூறும்போது, “இந்திய ராணுவத்தில் உள்ள ஏவுகணைகளில் மிக துல்லியமாக இலக்கை தாக்குவதில் பிரம்மோஸ் ஏவுகணை சிறப்பிடம் பெற்றுள்ளது” என்றார்.

8.4 மீட்டர் நீளம் உள்ள இந்த ஏவுகணையானது ஒலியை விட 2.9 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது. 290 கிலோமீட்டர் தூரம் பாயக் கூடியது. இந்த ஏவுகணையில் 300 கிலோ வெடிபொருட்களை பொருத்த முடியும். ரேடார்களின் கண்காணிப்பில் சிக்காமல் மிகவும் தாழ்வாகப் பறக்கும். நிலம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் ஆகியுவற்றிலிருந்து இதை ஏவலாம்.

இந்த ஏவுகணையால் நாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கும். நீர்வளம் பெருகும். விவசாயம் ஓகோவெனறு இருக்கும். மாலை வேளையில் பெண்கள் இருளில் பெண்கள் தைரியமாக நடமாடலாம். பஸ்களில் எல்லோருக்கும் சீட் கிடைக்கும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுளுக்கெடுக்கப்படுவார்கள். மோடியைக் கண்டாலே நவாஸ் ஷெரிப் கதிகலங்கி ஓடுவார். நாட்டுக்கு எவ்வளவு நன்மை?

பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்கவென்றே ஒரு நிறுவனம் இருக்கிறது. அதுதான் இந்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ். ஏவுகணை தயாரிப்புக்கான செய்கூலி, சேதாரம் , சர்வீஸ் சார்ஜ் எல்லாம் இந்த நிறுவனத்துக்குத் தான்.

பிரம்மோஸ் ஒரு தனியார் நிறுவனம். அதாவது ப்ரைவேட் லிமிடெட் கம்பெனி. இன்றைய தேதி வரை இந்திய ராணுவத்துக்கு ஏவுகணைகள் செய்து தருகிறது. சப்போஸ் நாளைக்கு ‘கூட ஒரு 100 கோடி சேத்துத் தர்றோம் எங்களுக்கு உங்க ஏவுகணை டெக்னாலஜியைத் தாங்க’ என்று பாகிஸ்தானே கேட்டுவிட்டால் அவர்கள் விற்கமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. பிஸ்னெஸ் தானே பாஸ் எல்லாமே ?

அதனாலே, நாட்டின் இந்த வெற்றியைக் கொண்டாட, பாகிஸ்தானின் வாலை ஏவுகணையால் அறுக்க நாம் எல்லோரும் தேசபக்தியுடன் பிரமோஸ் ஏவுகணை வெற்றியை ஒரு ஜாக் டேனியல்ஸ் சகிதம் கொண்டாடுவோம்.

சரிஈஈஈ.. இதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு ? ஒரு ஏவுகணை விலை அதிகமில்லை ஜென்டில் மேன் 2000 கோடி தான். இது மாதிரி 200 செய்யப் போறாங்க. உலகம் பூராவும காலி பண்ணிரலாம். எப்புடி ?

ஜெய்ஹிந்த்.