ப்ராயல்ர் சிக்கன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் – புதிய ஆய்வு.

புதுடெல்லியில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் குழுவினர் இந்த எச்சரிக்கை விடுத்தனர். சிக்கன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி எப்படிக் குறையும்?

சாதாரணமாக இயற்கையான முறையில் வளரும் நாட்டுக் கோழிகளை சாப்பிட்டால் இப்படி ஏற்படாது. ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகளைச் சாப்பிட்டால் அது நமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கிறதாகம். அதாவது அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கோழிகளுக்கு நோய் தடுப்பிற்காக கொடுக்கப்படுவதால், அதைச் சாப்பிடுபவர்களுக்கும் அந்த ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் உள்ளே சேருவதால், அவர்களது இயலான நோய் எதிர்ப்புச் சக்தி குறைய சாத்தியமிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கங்காராம் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் டாக்டர் சந்த் வட்டல் குறிப்பிடும் போது, “விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அறிவுக்கு விரோதமான முறைகளில், அளவுகளில் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் அளிக்கப்படுவது நம்மை பெரிய பிரச்சினையில் தள்ளிவிடும். குறிப்பாக மனித ஆரோக்கியம் பெரிய இடர்பாடுகளை இதனால் சந்தித்து வருகிறது.

மேலும், நாம் ஏற்கெனவே கிடைத்து வரும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள், மாத்திரைகள் விலை அதிகமாக இருக்கும் எனவே முறையற்ற விதங்களில், தேவையற்ற, அறிவுக்கு புறம்பான விதங்களில் அதனை கோழிகளுக்கும், மனிதர்களுக்கும் பயன்படுத்துவது கூடாது” என்றார்.

அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுவதன் விளைவு, உணவுச்சங்கிலியை பாதித்து, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த வித ஆன்ட்டி பயாடிக் மருந்தும் வேலை செய்யாது போய்விடும் அபாயம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகிறது. காரணம், பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை எளிதில் தடுத்தாட்கொள்ளத் தொடங்கி விட்டன. இதனால் பிற்பாடு எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்துவது கடினமாாகிவிடும் என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.

பேசாம நாட்டுக் கோழியை பிடிச்சு சாப்பிடுங்க. பிரச்சனையே இல்லை.