ஹாலோவியன் தினமான நேற்று ஒரு ராட்சத மண்டை ஓடு வடிவ வால்நட்சத்திரம் பூமியைக் கடந்து போயிருக்கிறது. இந்த வால்நட்சத்திரத்திற்கு 2015 டிபி 145 என்று பெயர் வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

பூமியிலிருந்து 4 லட்சத்து 86 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இந்த வால் நட்சத்திரமானது பூமியைக் கடந்து போயுள்ளது. அதாவது நிலாவுக்கு கொஞ்சம் அந்தப் பக்கம். இது ஒரு இறந்து போன வால்நட்சத்திரம். 600 மீட்டர் குறுக்களவு கொண்டது. பார்ப்பதற்கு பெரிய மண்டை ஓடு போல இது உள்ளது என்று நாசா வி்ஞ்ஞானி கெல்லி பாஸ்ட் கூறியுள்ளார்.

இந்த வால் நட்சத்திரமானது சுமார் 1 லட்சம் கி.மீ வேகத்தில், பூமியை நோக்கி வருவது கடந்த அக்டோபர் 10ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. ஹவாயில் உள்ள பேன் ஸ்டார்ஸ் 1 என்ற டெலஸ்கோப்தான் இதைக் கண்டுபிடித்தது. அடுத்து இந்த வால் நட்சத்திரம் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பூமிக்கு அருகில் வருமாம். அப்போது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே 3.8 கோடி கிலோமீட்டர் தொலைவில் இது பூமியைக் கடந்து செல்லுமாம்.

இது பூமியைக் கடந்தபோது எந்தவிதமான பாதிப்பையும் பூமிக்கு கொடுக்காமல் சைலன்ட்டாகப் போய்விட்டது. ஒருவேளை கொஞ்சம் ட்ராக் மாறி பூமி மேல் விழுந்திருந்தால் என்னவாயிருக்கும் ? 2012 என்று ஒரு ஹாலிவுட் படம் வந்ததில்லையா ? அது போல நாமெல்லாம் காலி.

Related Images: