செம ஹாட் நீங்க..! ஹீரோவை வர்ணித்த தீபிகா படுகோனே

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘பாஜிராவ் மஸ்தானி’படத்தில் ரன்வீர்சிங் செம ஹாட்டாக இருப்பதாக தீபிகா படுகோனே ட்விட் செய்து உள்ளார்.

18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஜிராவ் என்ற மராட்டிய மன்னரின் வாழ்க்கையை சுவாரஸ்யத்துடனும் பிரம்மாண்டத்துடனும் படமாக்கியுள்ளார் இயக்குநர் பன்சாலி.

இதில் பாஜிராவ் என்ற அரசரின் வேடத்தில் ரன்வீர் சிங்கும் அவரது முதல் மனைவியான காஷிபை என்கிற கதாபாத்திரத்தில் கவர்ச்சியான ராணியாக பிரியங்கா சோப்ராவும், அரசரின் 2-வது மனைவியான மஸ்தானி என்ற மராட்டிய வீராங்கனை வேடத்தில் தீபிகா படுகோனும் நடித்துள்ளனர்.
இப்படமானது டிசம்பர் மாதம் 18-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வெளியான இரண்டு நாட்களில் 10 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்து இருந்தனர்.

அதுகுறித்துதான் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் நடித்துள்ள ரன்வீர் சிங் செம ஹாட்டாக இருக்கிறார் என வெளிப்படையாகவே தீபிகா படுகோனே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே இருவரும் ‘ராம் லீலா’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.