பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிட்டால் புற்று நோய் வரும்.

தீபாவளிக்கு எல்லாரும் கறிக்கடையில் க்யூவில் நிற்கும் நேரம் இதைச் சொன்னது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவைப் பொறுத்தவரை இறைச்சியை பெரும்பாலும் வெட்டியவுடன் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைவிட வெளிநாட்டவர்கள் சாப்பிட இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸோ இது நமக்கு இல்லை. ப்ரிட்ஜ்ல கறியை வெச்சு சாப்புடுறவங்களுக்கு பொருந்தும்.

உலகளாவிய அளவில் இறைச்சி ஏற்றுமதிமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. பொதுவாக இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு ஒரு கிலோ இறைச்சிக்கு சுமார் 16 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ காய்கறிகளை பதப்படுத்தி தயார் செய்ய 320 லிட்டர் தண்ணீர் இருந்தாலே போதுமானது.இறைச்சி பதப்படுத்துதலுக்காக அதிக தண்ணீரை செலவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இறைச்சி பதப்படுத்துதலால் சுற்றுச்சூழலும் அதிகம் பாதிக்கப்படுகிறது. இந்திய மாட்டுப் பண்ணைகளில் இப்போது அதிக அளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாவின் பாதிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் மாட்டிறைச்சி சம்பந்தமாக பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வெறுப்புப் பிரச்சாரம் செய்து வரும் வேளையில் உலகச் சுகாதார நிறுவனம் ‘ஆமா நீங்க சொல்றது சரிதான். மாட்டுக் கறி நமக்கு ஆபத்தானது’ என்று ஏன் வாலன்டியரா வந்து சொல்லுது ?

இந்தியா உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு. மாட்டிறைச்சி ஏற்றுமதியால் விவாசாயிகளும், கால்நடை வளர்க்கும் குடியானவர்களும் அவர்களது பொருளாதார வாழ்க்கையை அரசிடம், தனியாரிடம் கையேந்தாமல் தனித்து நிற்கும் சூழல் தற்போது உள்ளது. இந்த டைம்ல இப்படி உலகச் சுகாதார நிறுவனம் வாலன்ட்டியராக வந்து ஆஜராகி இந்தக் கேடுபற்றி திடீரென ஆராயந்து சொல்லவேண்டிய அவசியம் என்ன?