டெல்லியில் இன்று நடைபெற்ற 7-வது அணு சகதி.. ஸாரி சக்தி மாநாட்டில் பங்கேற்ற அணு சக்தித் துறை செயலாளரும் அணு சக்தி ஆணைய தலைவருமான சேகர் பாசு என்ன சொல்ல வர்றார்னா இதுக்கு மின்னாடி அணு உலைல என்ன பாதிப்பு வந்தாலும் அதுக்கு அரசு பொறுப்பா இருந்துச்சு.

இப்போ உலகளாவியத்துல அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தான் இந்தியாவில அணு உலை கட்டித் தருது. எல்லாம் பிஸ்னெஸ். இந்த பிஸ்னெஸ்ல ஒருவேளை அணு உலைல லைட்டா ஒரு ஓட்டை வந்து கதிரியக்கம் வந்து கொஞ்சம் மக்கள் செத்துப் போறாங்கன்னு வையுங்க. அப்போ யாரைப் புடிச்சு கேஸ் போடுவீங்க. அணு உலையை கட்டுனவனையும் அவனுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் வித்தவனையும் தானே.

ஆனா நடந்த இந்த மாநாடு நடந்தப்புறம் என்ன சொல்லுறாங்கன்னா, “அணு மின் நிலையங்களுக்கு உதிரிபாகம் வழங்கும் நிறுவனங்கள் உள்நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும் வெளிநாடுகளைச் சேர்ந்ததாக இருந்தாலும், விபத்து நேரிட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பாக்கப்பட மாட்டார்கள். இது ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்படும். அதாவது பிரேக் பிடிக்காம வண்டி மோதிட்டாலும் பிரேக் கேபிள் கம்பெனிக்காரன் மேல கேஸ் வராது.

எனினும், அணு உலைகளை வடிவமைக்கும், நிர்மாணிக்கும் நிறுவனங்கள் உட்பட முக்கிய பாகங்களை வழங்குபவர்கள் விபத்துக்கு கொஞ்மாவது பொறுப்பேற்க வேண்டும் (பின்னே அதுகூட இல்லைனா எப்படி?). அணு உலைகளை நிர்மாணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.1,500 கோடிக்கு காப்பீடு செய்ய வேண்டும(அடேங்கப்பா எவ்வளவு பெரிய தொகை!). மேலும் அதே தொகைக்கு இந்திய அணு மின் கழகமும் (என்பிசிஐஎல்) காப்பீடு செய்யும்.” இப்படி அணு உலை பிஸ்னஸ் பண்ற கம்பெனிங்க சார்பா நம்ம சேகர் பாஸ்ஸூ சொல்றாப்ல.

புகுஷிமாவுல விபத்து வந்துச்சே தெரியுமா ? அங்கே அணு உலை வெடிக்கலாம் இல்லை. ஜஸ்ட் குளிரவைக்கிற தண்ணி டாங்க் புட்டுகிடிச்சு. அவ்வளவு தான். ஹீட் ஓவராப் போய் அணு உலை பூமிக்குக் கீழே டபுக்குன்னு உள்ளே கொஞ்சம் இறங்கிடுச்சு. இது பெரிய விபத்து கூட இல்லை. அதுக்கே புகுஷிமாவைச் சுத்தி உள்ள குழந்தைகள் 3000 பேர் வரை கேன்ஸர் வந்துடுச்சுன்னு கண்டு பிடிச்சுருக்காங்க. அந்த அணு உலையை நிமித்தி மேலே எடுக்கணும்னா 4000 ஆயிரம் கோடிக்கு மேல செலவாகும்ன்றாங்க. இங்கே என்னடான்னா போதும் போதும் 1500 கோடின்றாங்க.

எதுக்கும் கல்பாக்கம், கூடங்குளம் பக்கம் வீடு வாசல் வாங்குறவுங்க கொஞ்சம் சாக்கிரதையா வாங்குங்க. ஏதாச்சும் புட்டுகிச்சுனா, கேன்ஸர் வந்து உயிரும் போகும். கையில் எதுவும் பைசாவும் கிடைக்காது.

Related Images: