நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தம் அடிக்கும் புகைப்படத்தை நீக்கி உடனே மன்னிப்புக் கேட்காவிட்டால், நேராக அவர் வீட்டுக்கே சென்று போராட்டம் நடத்துவோம்` என்று இந்து மக்கள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வீர மாணிக்கம் சிவா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் புகை பிடிப்பது போன்ற படங்களை பதிவு செய்து பகிர்ந்துள்ளார். இவரின் இந்த செயல் இளம் தலைமுறையை புகை பிடிக்க தூண்டுவது போல் அமைந்துள்ளது.

புகை பிடிப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் பல நோய்கள் ஏற்படுகிறது. ஆண்களும் பெருமளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால், அரசு புகை பிடிக்காதீர் என பல விளம்பரங்களை செய்தாலும் இவர் போன்ற சமூக அக்கறை இல்லாத நடிகைகளால் தான் இளம் தலைமுறை சீரழிகிறது.

புகைபிடிப்பதால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என புகை பிடிக்காதவர்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வுகள் சொல்கிறது. நடிகை சமந்தா பகிர்ந்து கொண்ட படத்தினை நீக்குவதோடு, தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர் வீட்டிற்கு புகையிலை பாக்கெட் தபால் மூலம் அனுப்பப்படும், அவர் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்து மக்கள் கட்சி தயங்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Images: