சேது, சந்தானம், பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், விசாகாசிங் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் சேது, சந்தானம், விசாகாசிங் கூட்டணியில் மீண்டும் ‘வாலிபராஜா’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

பவர்ஸ்டார் கவுருவத் தோற்றத்தில் நடிக்கும் இப்படத்தில் நஷ்ரத்பாருஷா, ஜெயபிரகாஷ், VTV.கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரதன் இசையமைத்துள்ள இப்படம் இன்று வெளிவரும் என்று இன்றைய நாளிதழ்களில் விளம்பரம் வந்த நிலையில் தற்போது இப்படம் இன்று வெளிவராது என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படுமென்றும் கூறியுள்ளனர்.

இதுபோல் இந்தப் படத்திற்கு எத்தனையோ முறை ரிலீஸ் தேதியை அறிவித்து பின் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Images: