வித்யாபாலன் விருதைத் திருப்பித் தர விரும்பவில்லை !

மதசகிப்புத்தன்மை குறித்த சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசுக்கு எதிராக விருதுகளைத் திருப்பித் தரும் கலைஞர்களின் பட்டியலைப் போல் விருதைத் திருப்பித் தரப்போவதில்லை என்று கூறும் கலைஞர்களின் பட்டியலும் அதிகரித்து வருகிறது.

விருதுகளைத் திருப்பித் தருவது சரியல்ல என்று நடிகர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்திருந்தார். முன்னதாக இதே போன்ற கருத்தை நடிகர் ஷாருக்கானும் கூறியிருந்தார். நடிகர்கள் ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து நடிகை வித்யா பாலனும் தமக்கு அளிக்கப்பட்ட விருதைத் திருப்பித் தரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் தி டர்ட்டி பிக்சர் படத்திற்காக ஏராளமான விருதுகளைப் பெற்ற வித்யா பாலன் அரசு அளித்த கவுரவத்தை தாம் இழக்க விரும்பவில்லை என்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

எழுத்தாளர்கள் உட்பட பலரும் விருதுகளைத் திருப்பியளித்ததில் பா.ஜ.க அரசில் நடந்த மதவெறித்தனமான நடவடிக்கைகள் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனக்கு இவ்வளவு சீக்கிரம் பெயர் கெட்டுப் போகும் என்று எதிர்பார்க்காத பா.ஜ.க அரசு கமல் போன்ற மற்ற கலைஞர்கள் மூலம் விருதைத் திருப்பியளிப்பதற்கு எதிராக பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கமல் சென்ற வாரம் மும்பை சென்று தாக்கரேயை சந்தித்து வந்தார்.