மஞ்சு வாரியருக்கு பாவனா செய்த அட்வைஸ்..

தமிழில் முழுதாக வாய்ப்புகளை இழந்து ‘ராசியில்லாத நடிகை’ என்கிற பெயரோடு  சொந்த ஊருக்குப் போனார் பாவனா அங்கும் நடித்தோமா என்றில்லாமல், தனக்கு நெருக்கமான திருமணமான சில நடிகைகளுக்கு  ‘பெண் சுதந்திரம்’ பற்றி வாய் கிழியப் பேசி அவர்களை குடும்பத்தை பிரிக்கும் சூழல் வரை கொண்டு வந்து விட்டார்.

திலீப் – மஞ்சு வாரியார் ஜோடி பிரிந்தது, பாவனா மஞ்சு வாரியரிடம் கூறிய அட்வைஸ்களால் தானா என்று சந்தேகம் கொள்கிறார்கள். எந்த சண்டையும் இல்லாமல் இருந்தவர்கள் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றார்கள். இதனாலேயே திலீப் தொடர்ந்து மலையாளத்தில் பாவனாவுக்கு வரும் எல்லா சினிமா வாய்ப்புகளையும் தடுத்தி நிறுத்த ஆரம்பித்துவிட்டாராம்.

இதை  வெளிப்படையாக நொந்துபோய் கூறுகிறாராம் பாவனா. பெண் சுதந்திரம், ஆண் சுதந்திரம் எல்லாம் நிஜ வாழ்க்கையில் அதனதன் எல்லைக்குட்பட்டே தான் இருக்கும் என்பது பட்டால் தானே புரியும் ?