‘கார்த்திக் மருத்துவமனையில்” செய்தி வதந்தி – கவுதம் கார்த்திக் விளக்கம்

நடிகர் கார்த்திக்குக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் நேற்று முன்தினம் இரவு அவர் ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் இணையதளங்களில் நேற்று செய்தி பரவியது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி, கார்த்திக் நலமுடனே இருக்கிறார் என்றும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த செய்தியில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளனர் .

இதுகுறித்து அவரது மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘சாதாரண மெடிக்கல் செக்-அப்புக்குதான் அப்பா ஹாஸ்பிட்டல் போயிருந்தார்.. வேறு எதுவும் இல்லை.. தயவுசெய்து யாரும் வதந்திகளை பரப்பவேண்டாம்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.

வாழ்க வளமுடன்..!