ஜீவா தற்போது திருநாள், போக்கிரி ராஜா, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ‘ஜெமினி கணேசன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது.

தற்போது இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘வேதாளம்’ படத்தில் அஜீத்தின் தங்கையாக சிறப்பாக நடித்ததால் லட்சுமிமேனனுக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் தற்போது ‘ஜெமினிகணேசன்’ படத்திலும் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.

சூரி, ‘மெட்ராஸ்’ கலையரசன் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை கோபாலகிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

Related Images: