தாரை தப்பட்டை பாடல் வெளியீடு தள்ளிப் போன காரணம்.

பாலாவின் இயக்கத்தில் கூத்துக் கலைஞர்களின் வாழ்வியல் கதையாக உருவாகி வரும் தாரை தப்பட்டைப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இளையாராஜா இசையமைத்துள்ள ஆயிரமாவது படம் இது.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் பாடல்கள வெளியீட்டு விழா இம்மாதம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.  சமீபத்தில் சென்னையில் வந்த பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து சிரமப் பட்டு வரும் நிலையில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த வேண்டுமா  என இளையராஜா கேட்க, அதை ஆமோதித்த பாலாவும் பாடல் வெளியீட்டு விழாவை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைத்துவிட்டார்.

இந்நிலையில் இருநாட்களுக்கு முன்பு இளையராஜா வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய நிகழ்வில் பேசிய போது அவரிடம் வேண்டுமென்றே நக்கலாக சிம்புவின் பீப் பாடல் பற்றி ஒரு நிரூபர் கேட்டு விட, உடனே கோபமான ராஜா, எந்த நேரத்தில் என்ன பேச்சு பேசுகிறான் என்று அந்நிருபரை வறுத்தெடுக்க ஆரம்பிக்க, சுற்றியிருப்பவர்கள் அவரை சமாதானப்படுத்தி கூட்டிச் சென்றுவிட்டார்கள்.

இந்நிகழ்வை வைத்து ராஜாவை பத்திரிக்கையாளரை இழிவுபடுத்திவிட்டார் என்று பேசிய அந்த நிரூபரின் சாதகமான நிருபர் குழாம், இளையராஜாவைப் பற்றி அவதூறாக செய்திகள் வெளியிட இந்த நியூஸையும் கூட பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவ்வளவுதாங்க விஷயம்.