அஜித், விஜய் ஆகிய இரண்டு பெரிய ஸ்டார்களும் தங்களுக்குள் நண்பர்களாக இருந்தாலும் அவர்களுடைய ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வதையும் சில சமயம் இந்த மோதல் எல்லை மீறி போவதையும் பார்த்து வருகிறோம்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இதுகுறித்து ஒரு தரப்பினர் காவல்துறை புகார் அளிக்கும்வரை போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் டிவியில் கோபிநாத் நடத்தி வரும் ‘நீயா நானா’ என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியில் வரும் வாரம் அஜீத், விஜய் குறித்த விவாதம் ஒளிபரப்பாக உள்ளதாக டுவிட்டரில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உண்மையானால் இந்த வாரம் ‘நீயா நானா’ நிகழ்ச்சி அனல் பறக்கும் என்றும் நிகழ்ச்சியில் பேசும் அஜீத், விஜய் ரசிகர்களின் கருத்துக்கள் தெறிக்க வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருபவர் ஒரு திரையுலக பிரபலமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Images: